கூட்டணி கட்சியினரிடமே வேலையைக் காட்டிய திமுக!

0
88

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இடையே தகராறு உண்டாகி இருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக திமுக என்று இரு கட்சிகளுமே மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது அதேபோல அதிமுக திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில் திமுகவின் தூத்துக்குடி மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பனுக்கும் சமீபகாலத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கின்றது விசிகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இதற்கு காரணம் அனிதா ராதாகிருஷ்ணன் தான் என்று தெரிவிக்கப்படுகின்றது இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டிருக்கின்றார்.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழ் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் இடம் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணையை நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள் இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக போராட்டம் நடந்து இருக்கின்றது.

இது தொடர்பாக தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தரப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தரக்குறைவாக பேசியதாக தெரிவிக்கிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது ஒரு சிலர் ஆளும் கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு கூட்டணியை உடைக்க முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்கள் ஏதேனும் சாதிப் பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் கலவரம் செய்ய திட்டம் இடுகிறார்கள் யாரும் என்னைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது இன்னும் 4 மாதங்களில் நம்முடைய ஆட்சிதான் காவல்துறையும் நம் கையில் தான் எத்தனை வழக்கு வந்தாலும் கவலையில்லை அனைத்தும் பீஸ் பீஸ் ஆகிவிடும் என்று தெரிவித்ததாக தெரிகின்றது இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை வெடிக்கின்றது.

சிறிது காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடனேயே திமுகவின் எம்எல்ஏ ஒருவர் பிரச்சனை செய்வது இரு கட்சியினருக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.