வாரிசு படத்தின் புதிய அப்டேட்! விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

0
110

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு அடுத்து தற்போது விஜய் நடிப்பில் வெளிவரும் படம் வாரிசு இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா முதல் முறையாக இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகின்றர்கள் என்ற தகவல் வெளியானது.

மேலும் பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இணைய தளத்தில்  படப்பிடிப்பு புகைப்படம் வெளிவந்த நிலையில்இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவை இப் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி என்றும் கூறப்படுகிறது.

author avatar
Parthipan K