தென்னிந்தியாவில் கால்பதிக்கும் பாலிவுட் ஆடியோ வெளியீட்டு நிறுவனம்… வாரிசு மூலம் எண்ட்ரி?

0
96

தென்னிந்தியாவில் கால்பதிக்கும் பாலிவுட் ஆடியோ வெளியீட்டு நிறுவனம்… வாரிசு மூலம் எண்ட்ரி?

பாலிவுட்டின் பிரபல பாடல் வெளியீட்டு நிறுவனமாக இருப்பது டி சீரிஸ் நிறுவனம்.

நடிகர் விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. முதலில் துணிவு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்றும், வாரிசு ஜனவரி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வாரிசு திரைப்படம் துணிவு திரைப்படத்துகு ஒரு நாள் முன்பாகவே ஜனவரி 11 ஆம் தேதி புதன் கிழமையே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வந்த பாடல் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படத்தின் ஆடியோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் பிரபல ஆடியோ நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.