இறங்கி வரும் பன்னீர்செல்வம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

0
74

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நூற்றுக்கு நூறு சதவீதம் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, கட்சிப் பொறுப்பில் இருந்த போதும் சரி அதிமுக எப்படி இருந்ததோ அதற்கு மாறாக அப்படியே தலைகீழாக இருப்பதாக அந்த கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் பல்வேறு சிக்கல்களை அதிமுக சந்தித்து வருகிறது. சசிகலா விவகாரம் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் வழித்தோரின் மோதல் என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினைகளில் சீக்கிய அதிமுக பேசு பொருளாக இருந்து வருவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் முதல் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி என்று மறுபடியும் சிக்கல்களை சந்தித்து வந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தான் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பேசுபொருளாக இருந்து வருகிறது. இன்று விடாப்பிடியாக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்.

இந்த நிலையில் கட்சியின் வருங்கால நலன் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து பச்சை கொடி காட்டப்பட்டதை தொடர்ந்து அதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்று ஆராய்ந்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் ஒரு சில மூத்த முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இதுகுறித்து ஆலோசிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாகவே ராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைலாம் என்று பேசியிருக்கிறார். ஆனாலும் இதனை எடப்பாடி பழனிச்சாமி அறவே விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக அதிமுகவில் சசிகலா மற்றும் பன்னீர் செல்வத்துக்கு 100% இடமில்லை என்று உறுதியாக மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து மறைமுகமாக அழுத்தம் கொடுத்த மேலிடத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் தன்னுடைய செல்வாக்கு காரணமாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியும். என்றும் இதற்காக கட்சியை தயார் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பன்னீர்செல்வம் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் பக்கம் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனவும் ஆனால் பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர் வைத்திலிங்கம் வழித்தோருக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லை என்று விடாப்பிடியாக மறுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறுகிறது அவருடைய தரப்பு.

பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வருவதற்கான வாய்ப்பில்லை இன்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்ற நிலையில் தனியாக கட்சி தொடங்கலாமா என்று பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன ஆகவே அதிமுகவில் மறுபடியும் பழைய பரபரப்பு தொற்றிக் கொண்டது.