வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

0
137

இந்தியாவின் அதிகவேக ரயிலாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்த்து செல்வதற்காவும் அதனுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும் பலர் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரயிலை படமெடுப்பதற்காக சென்றவர் ரயில் கதவு சாற்றியதால் 159 கிலோமீட்டர் பயணம் செய்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை படம் எடுப்பதற்காக ஏறிய அந்த நபர் ரயிலை படமெடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் கதவுகள் சாற்றிகொண்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று நிலைமையை கூறியுள்ளார்.

ஆனால், இது தானியங்கி ரயில் என்றும் பாதியில் கதவை திறக்க முடியாது எனவும் டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார். மேலும், பயணச்சீட்டு இல்லாமல் ஏறியதற்காக டிக்கெட் தொகையுடன் அபராதத்தையும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதனால், அந்த நபர் டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஆனால், இந்த ரயிலில் அது போன்று செய்ய முடியாது என கூறினர்.

இதனால், செய்வதறியாது திகைத்த அவர் விஜயவாடா வரை பயணம் செய்தார்.இந்த சம்பவம் தொடர்பான இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது