வன்னியரால் வெற்றி! வன்னியருக்கே துரோகமா? பாட்டாளி மக்கள் கட்சியினர் கேள்வி!

0
102

வடமாவட்டதில் அதிகம் வாழும் சமூகம் வன்னியர் தமிழ் சமூகம். அவர்களுக்கு சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதாக அச்சமுகத்தை சார்த தலைவர்கள் கூறி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 30 விழுக்காடு கொண்ட சமூகம் ஒடுக்க படுகிராத என்ற எண்ணம் அச்சமுக மக்களிடையே ஐயம் தோன்றியுள்ளது.

அவர்கள் அரசியல், வேலைவாய்ப்பில், சமூக பங்களிப்பு போன்ற விஷயங்களில் புறம் தள்ளபடுவதாக அச்சமூகத்தின் தலைவர்களும் பாட்டாளி மக்கள் கட்சயினரும் தெரிவிக்கின்றனர். திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். இந்த சமூகத்திற்கு திமுக துரோகம் செய்தது ஏன்? என திமுகவை நோக்கி பாமக கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கட்சிகளும் உருவாக்கியதும் வளர்த்து விட்டதும் வன்னியர்கள் தான் என்று கூறுகின்றனர். இதுகுறித்து பாமக தரப்பில் வெளியான அறிக்கையில்; வன்னியர்களின் 1950 அரசியல் வரலாறு, சுதந்திர இந்தியாவில் வன்னியர்களுக்கு அரசியல் சட்ட உருவாக்க சபையில் இடம் அளிக்கப்படவில்லை. பத்துலட்சம் மக்களுக்கு ஒரு அரசியல் சபை உறுப்பினர் என்கிற காங்கிரசு கட்சி அறிவிப்பை நம்பி, வன்னியர்களுக்கு 3 உறுப்பினர் இடம் வேண்டும் என்று வன்னியர்கள் தில்லிக்கு தூது சென்றனர். ஆனால், காங்கிரசு கட்சி ஒரு இடம் கூட கொடுக்கவில்லை.

1987 லில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தி இடஒதுக்கீடு சட்ட பூர்வமாக வாங்கி தரப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இது தமிழகத்தில் வாழும் வன்னிய சமூக மக்களுக்கு உதவும் வகையில் 20 சதவீதம் வழங்கப்பட்டது. ஆனால் அரசியலில் தொடர்ந்து புறம் தள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் வன்னியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் கூடுதலாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரில் ஒரே ஒருவருக்கு கூட இடம் கொடுக்கவில்லை.
காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்தது.

இதனால் அச்சமுகம் பெரும் கோபம் அடைந்து விடுதலைக்கு காரணமான காங்கிரசுக் கட்சியை, இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1949 ஆம் ஆண்டின் உள்ளாட்சித் தேர்தலில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் தோற்கடித்தது. தென்னார்க்காடு ஜில்லா போர்டு தேர்தலில் மொத்தமிருந்த 52 இடங்களில் 22 இடங்களை சங்கம் கைப்பற்றியது.

மேலும், பாதிக்கபட்ட காங்கிரஸ் கட்சி ஒரு சட்ட ரீதியாக வன்னியர்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டது. அதாவது 1950 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம் – சாதி அமைப்புகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ததால் – 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் ‘காமன்வீல் கட்சி’ என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர்.
அப்போதைய 190 சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 25 இடங்களை வன்னியர் கட்சிகள் கைப்பற்றின. இதனால், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே, சென்னை மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை சந்தித்தது.

காங்கிரஸ் கட்சி தனித்து பெரும்பான்மை இல்லாததால் வன்னியர்களின் உதவியை நாடினர். காமன்வீல் கட்சி ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கியது. பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி காமராசரை முதலமைச்சர் ஆக்கியது. இதில் என்ன அரசியல் சூழ்ச்சி என்றால் காங்கிரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னியர் கட்சிகள் இரண்டையும் கலைத்துவிட்டனர்.

வன்னியர்கள் திமுகவை வளர்த்த வரலாறு:

பின்பு காங்கிரஸ் தன்னை நிலைப்படுத்தி கொண்டு வன்னியர்களை ஒதுக்கு வைத்தது அவர்களுக்கு அரசியல் ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. காங்கிரசை வெறுத்த வன்னியர் சமூகம் – திமுகவை வளர்த்தது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் தலைவருமான ஆ. கோவிந்தசாமி 1954 ஆம் ஆண்டில் ‘உழவர் கட்சி’ எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை, கஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் தான் ஏமாற்றி விட்டது என மனம் தளராது வன்னியர்கள் கோவிந்தசாமி தலைமையில் பின்னர் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர். திமுக வன்னியர்களின் வெற்றி சின்னமான உதய சூரியன் சின்னத்தை சின்னத்தை எடுத்துக்கொண்டது. அக்கட்சி முதன் முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளாகும்.

திமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது வன்னியர் சமூகம் அதற்கு ஆதாரமாக 1962 தேர்தல் திமுக வெற்றி பெற்ற 50 இடங்களில் மிக அதிகமானவை வன்னியர்கள் வாழும் தொகுதிகள் ஆகும். இதனை Myron Weiner எனும் அரசியல் ஆய்வாளர் தனது Politics of Scarcity நூலில் “In the 1962 elections for the Madras Legislative Assembly, a large number of Vanniyakula Kshatriyas in North and South Arcot, Trichinopoly, Tanjore and Salem supported the DMK. It was in these districts that the DMK registered most of its gains” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போதும் கூட – மிக அதிகமான இடங்களை வெற்றி கொண்டது வன்னியகள் ஆதரவுடன் தான். இவ்வாறு திமுகவுக்கு வன்னியர் சமூகம் பெரிதும் உதவியது. இதனால் அரசியல் ரீதியாக திமுக அழிக்க முடியாத சக்தியாக வளர்ந்து.

திமுக செய்த துரோகம்:

திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த பெரிதும் உதவிய வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்த நன்மைகள் என்ன?

திமுகவில் அடிப்படை உறுப்பினர் , கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், மாவட்டச் செயலாளர், போன்ற பதவிகளைக் கூட விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வன்னியர்களுக்கு கொடுக்க வில்லை கொடுக்காதது ஏன்?

1987 லில் மருத்துவர் ராமதாஸ் தன் சமூக மக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டத்தை முன்னெடுத்து மிகவும் குறைந்த பட்ச நீதியான – வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இடஒதுக்கீடு பெறுவதற்கு கூட – மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தின் மூலம் “21 உயிர்களை தியாகம் செய்த பின்னர் தான் திமுகவிற்கு மனம் இறங்கும்” என்கிற நிலை ஏற்பட்டது ஏன்?

திமுக காங்கிரஸ் போன்ற பெறும் அரசியல் கட்சிகளை உருவாகியது வன்னியர்கள். அவற்றில் வன்னியர்களின் அடையாளமான ராமசாமி படையாட்சியாரின் படத்தை, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்து தான் சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்கிற சூழலை திமுக உருவாக்கியது ஏன்?

மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

இத்தனை ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த கலைஞர் கருணாநிதிக்கோ, முக ஸ்டாலினுக்கோ இந்த எண்ணம் எழாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

வன்னியர்கள் தமிழகத்தில் அசைக்கமுடியாத அரசியல் சக்திகளை உருவாகியது என்பதில் எந்த வினாவும் இல்லை. ஏன் அவர்களின் உரிமை அரசியல் ரீதியாக பறிக்கப்படுகிறது என்பது என்று அச்சமூகத்தின் தலைவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் திமுகவை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். வன்னியர்களின் அரசியல் ரீதியாக இந்நட்டிர்க்கு செய்த தொண்டை இத்தொகுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K