வன்னியர் இட ஒதுக்கீடு! நிறைவேறுமா பாமகவின் கோரிக்கை!

0
110

வன்னியர் சமுதாயத்திற்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது இந்த விஷயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை அறிவித்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடந்த சமயத்தில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவை தமிழக அரசு சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாகவே அறிவித்திட வேண்டும் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக்குழு மறுபடியும் கூடி முக்கிய முடிவை எடுக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது அறிவிக்கப்பட்டு விட்ட பின்னரும் கூட வன்னியர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு நிலைப்பாடும் வெளிப்படாத காரணத்தால், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஜனவரி மாதம் 31ஆம் தேதி அந்தக் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

நிலவரம் இப்படியிருக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் .பி வேலுமணி ஆகியோர் அடங்கிய தமிழக அரசின் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையில் இந்த மாதம் 3ஆம் தேதி சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அந்த சமயத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இடம் தமிழக அரசின் குழு தெரிவித்தது.

தமிழக அரசின் குழு உடனான சந்திப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் விளக்கிக் கூறினார். இதன் அடிப்படையில், அந்தக் கட்சியின் நிர்வாகக்குழு சார்பாக நடந்த விவாதங்களின் இறுதியில் தமிழக அரசின் அழைப்பை ஏற்று கொண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி இன்றைய தினம் தமிழக அரசு குழுவுடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கலாம் என்று ஏகமனதாக தீர்மானம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் எடுக்கப்படும் முடிவு என்ன என்பதை மனதில் வைத்து பாட்டாளி மக்கள் கட்சி தன்னுடைய நிர்வாக குழுவை மறுபடியும் கூட்டி அரசியல் முடிவை எடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

அந்த தீர்மானத்தின்படி இன்றையதினம் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக அரசு சார்பாக இதுவரையில் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் யார் யார் என்பது போன்ற விவரங்களை கூட தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.