வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

0
113

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்காலிகமானது எனவும், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கான விரிவான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னாட்டு மக்கள் கட்சி வழக்குப்பதிவு செய்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாக, ஓபிசி பிரிவில் 22 சாதியை சார்ந்தவர்களுக்கு வெறும் 2.5 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு கிடைத்திருக்கின்றது. எனவும் அரசியல் லாபத்திற்காக தமிழக அரசு இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு இது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழக அரசு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக இதற்கு முன்னரே திமுக சார்பாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த பழக்கம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்தாலும் தற்சமயம் தென்னாட்டு மக்கள் கட்சி இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த போது அது நீதிமன்றத்தில் பெரிதாக சோபிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. காரணம் அந்த கட்சியை வழக்கு தொடர்ந்தது சரியான முகாந்திரம் இல்லாததால் அதோடு அதனை ஏற்றுக் கொள்வதற்கான காரணமும் சரியாக இல்லாத சமயத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் இதையெல்லாம் மனதில் வைத்துதான் தென்னாட்டு மக்கள் கட்சி வைத்து இப்படி ஒரு நாடகம் நடத்துகிறது திமுக என்று தெரிவிக்கிறார்கள்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே முழுமூச்சாக இறங்கி போராடி வருவது பாட்டாளி மக்கள் கட்சிதான். தற்போது அந்த சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று திமுக நினைத்திருந்தது ஆனால் திமுகவின் நினைப்பிற்கு கொள்ளி வைக்கும் விதமாக அதிமுக அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியது. இதனை பொறுத்துக் கொள்ள இயலாத திமுக இப்படி ஒரு வேலையை செய்து இருப்பதாக சொல்கிறார்கள்.