வெண்ணிலா கபடிக்குழு நடிகர் உயிரிழப்பு….

0
134

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த துணை நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலகுறைவு காரணமாக மதுரையில் உள்ள தந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த ஹரி வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக சர்க்கரை நோயால் ஹரி வைரவன் அவதிப்பட்டு வந்த நிலையில், கை, கால்கள் வீங்க தொடங்கியது. மேலும், தூங்கும் போதே கோமாவில் சென்றதாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டது. இந்தநிலையில், ஹரி வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K