இன்று திறக்கப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா

0
144
Vandaloor zoo reopen today

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இது வன உயிரி பூங்கா ஆகும்.

இந்த பூங்கா 1855 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட வன உயிரி பூங்கா ஆகும்.

ஊர்வன, பரப்பன, பாலூட்டிகள் என பல்வகை உயிரிகள் இருக்கின்றன.

இந்த வன உயிரி பூங்காவில் புலி, கரடி, சிங்கம், மான், கொம்பு மான், குரங்கு, யானை, கழுதை புலி, குள்ளநரி, காட்டுநாய், பாம்பு என பல வகையான உயிரிகள் வாழ்கின்றன.

இந்த பூங்காவிற்கு 2.04 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு வருகின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்கா மிக முக்கியமான சுற்றுலா தளமாகும்.

இங்கு கடந்த ஜனவரி மாதத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் எப்போது திறக்கப்படும் என நிர்வாகம் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா பிப்ரவரி மூன்றாம் தேதியான இன்று திறக்கப்படுகிறது.

author avatar
Parthipan K