தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் இவர்தான் அறிவிப்பை வெளியிட்ட பாஜக! அதிர்ச்சிக்குள்ளான அதிமுக!

0
50

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்து இருக்கின்றது.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி ஸ்ரீனிவாசன் மனு தர்மம் என்ற நூல் பெண்களை இழிவுபடுத்துகிறது பாரதிய ஜனதா கட்சி மனுதர்மத்தை பின்பற்றுகிறதா, என விடுதலை சிறுத்தைகள் உள்பட பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏதோ ஒரு நூலில் யாரோ சொன்னது, அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை திருமாவளவன் அவர்கள் அரசியல் நோக்கத்திற்காக மனு தர்மம் நூலை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டே இருக்கின்றார்.

பெண்கள் பற்றி காலாகாலத்திற்கும் ஓயாமல் எழுதி வைத்துக் கொண்டிருப்பது பெண்களுக்கு அவசியமற்றது பெண்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி சுதந்திரமாக நடமாடுவதற்கு அமைப்பு பாதுகாப்பு போன்றவையே முக்கியம்.

நடிகை குஷ்புவுக்கு பதவி அளிக்காமல் இருப்பதற்கு காரணம் அவர் பெரியார் வாதி என்று தெரிவித்தது இல்லை. குஷ்புவிற்கு மிக விரைவில் கட்சியில் ஒரு அங்கீகாரம் கொடுக்கப்படும். கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை என்றாலும் அவரை போராட்டங்களுக்கு தலைமை தாங்க பாஜக தேர்வு செய்து இருக்கின்றது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கின்றது இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவு செய்ய வேண்டி இருக்கின்றது.

அதிமுக தலைமை தாங்கி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தி இருக்குமானால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தெளிவான முடிவு இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.