வைகுண்ட ஏகாதசி! இன்று திறக்கப்படுகிறது சொர்க்கவாசல்!

0
68

பெருமாள் கோவில்களில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதனடிப்படையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு இன்றையதினம் நடக்கிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று 4:15 அளவில் பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகாரம் புறப்பாடு 4:30 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பின்னர் இன்று காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கிருமிநாசினி மூலமாக கைகளை சுத்தம் செய்வது, உடல் வெப்பநிலையை பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வராமல் தவிர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல பக்தர்கள் தேங்காய், பூ, பழம் மற்றும் துளசி உள்ளிட்டவை கொண்டு வரவேண்டாம். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் கூறியிருக்கிறது.

தியாகராயநகரில் இருக்கின்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று காலை 6 மணியிலிருந்து காலை 10 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து காலை 10 மணி முதல் 10 .30 மணி வரை தரிசனம் நிறுத்தப்பட்டு நெய்வேத்தியம் தொடர்ந்து பகல் 2 மணி வரையும் நடைபெற இருக்கிறது. ஆகவே இரண்டு மணி வரையும் தரிசனம் செய்யலாம் 2 மணி முதல் 2 30 மணி வரையில் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

தொடர்ந்து 2 .30 மணி முதல் மாலை 5 மணி வரையில் தரிசனம் நடைபெற உள்ளது 5 மணி முதல் ஐந்து முப்பது மணி வரையில் நெய்வேத்தியம் மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம். நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் ராஜசேகர் ரெட்டி, தேவஸ்தானம் அதிகாரிகள் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
.
இதைத் தவிர மாநகரில் இருக்கின்ற புரசைவாக்கம் வெள்ளார் தெருவில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்று பகல் 12 மணியளவில் ஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

அதேபோல மயிலாப்பூரில் இருக்கின்ற மாதவப் பெருமாள், ஆதிகேசவப் பெருமாள் கோவில் திருநீர்மலை நீர் வண்ணப் பெருமாள் கோவில், வில்லிவாக்கம் சௌமியா தாமோதர பெருமாள் கோவில், உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.