பிரதமர் மோடி அவர்களுக்கு வைகோ சரமாரி கேள்வி!

0
93

தமிழகத்திலேயே சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது அதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்திருக்கின்றன.அதேபோல அதிமுக திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும் கூட அவர்களின் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தை இறங்கியிருக்கிறார்கள்.இந்த நிலையில், மதிமுக தலைவர் வைகோ நேற்று மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதி அவர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்த சமயத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் திமுகவில் பெண்களை இழிவுபடுத்துவதாக தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார். அவருடைய அதிகாரத்திற்கும் அவருடைய தரத்திற்கும் இது அழகல்ல என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.


பெண்கள் தொடர்பாக திமுக இழிவு செய்துவிட்டது என்று சொல்கிறீர்களே பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது உங்களுடைய நேரடி ஆளுமைக்குள் இருக்கின்ற மாநிலத்தில் தானே நடந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு பாஜக ஆட்சி செய்கின்ற அந்த மாநிலத்தில் 2019 வருடம் ஐம்பத்தி ஒன்பதாயிரத்து 853 குற்றங்கள் நடந்து இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக வைகோ தெரிவித்திருக்கிறார். நாட்டிலேயே அந்த மாநிலத்தில்தான் அதிக குற்றங்கள் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.என்னதான் கூட்டணி லாபத்திற்காக வாக்கு அரசியல் காரணமாகவும் வைகோ இவ்வாறு பேசி இருந்தாலும் அதில் இருக்கும் உண்மையை நாம் மறுப்பதற்கில்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசு நல்லது செய்வதாக தெரிவித்துக் கொண்டாலும் அந்த கட்சி ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது .ஒருவேளை அந்தக் காட்சி இங்கே அதிகாரத்திற்கு வந்த விட்டால் எங்கே மற்ற மாநிலங்களில் நடந்ததை போல தமிழகத்திலும் நடந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் இயல்பாகவே தோன்றத்தான் செய்கிறது.ஆகவே தற்போது இருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையிலும் நிலை குலையாமல் இதே நிலையில் தொடர வேண்டும் என்பதே சாதாரண மக்களின் மன எண்ணமாக இருந்து வருகிறது.

ஆனால் திமுக ஆட்சி காலங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் எண்ணற்ற கற்பழிப்பு, கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அதுபோன்ற சம்பவங்கள் தற்போது தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை என்பது சிறப்பம்சமாகும்.வைகோ கூறுவதை யோசித்துப் பார்த்தால் பாஜக ஆளும் மாநிலங்களில் ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகமாக இருக்கிறதோ என்ற எண்ணமும் மனதில் தோன்றி மறைகிறது.

ஆனால் தமிழகத்தில் இதுவரையில் பாஜக எந்த ஒரு அதிகாரத்திற்கும் வரவில்லை ஒருவேளை அப்படி வந்தால் அது போன்ற சம்பவங்கள் இங்கே நடந்து விடுமோ என்ற பயத்தை ஆயுதமாக்கி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற துடிக்கின்றன. அதற்கு ஆளும் கட்சியான அதிமுக எந்த வகையிலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்து வருகிறது.