உங்களுக்கு ஒரு வருடமாக தான் லாக்டவுன் எனக்கு பத்து வருடமாக லாக்டவுன்! வேதனையில் நடிகர் வடிவேலு!

0
127

முன்பொரு காலத்தில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு இப்பொழுதும் கூட அவர் இல்லாமல் இணையதளத்தில் எந்த ஒரு மீம்ஸ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார். நேரமே இல்லாமல் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த வடிவேலு தற்பொழுது படங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்து வருகின்றார்.

திரையுலகைச் சார்ந்தவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் நண்பேன்டா என்ற வாட்ஸ்அப் குழுவின் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வடிவேலு மிகவும் உருக்கமாக உரையாற்றி இருக்கிறார். உடல் மிகவும் மெலிந்து காணப்பட்ட வடிவேலு கர்ணன் திரைப்படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற பாடலை பாடி கண் கலங்கி போனார். சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரிகளை அவர் ஏற்ற இறக்கங்களுடன் மிகவும் ரசித்து பாடியிருக்கின்றார்.

அது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பலரும் நடிகர் வடிவேலு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த வரையில் பிரச்சனை கிடையாது. அவர் எப்பொழுது அரசியல் மேடைகளில் திமுகவிற்கு பிரச்சாரத்தில் இறங்கினாரோ அப்பொழுது தான் அவருடைய சரிவு ஆரம்பமாகிவிட்டது என்று தெரிவித்தார்கள்.

நடிகர் விஜயகாந்த் அவர்களின் நல்ல மனதை அரசியல் தலைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களோ,இல்லையோ, ஆனால் திரைத்துறையில் இருக்கின்ற எல்லோருமே அவருடைய நல்ல குணத்தையும், நல்ல உள்ளத்தையும், தெரிந்து வைத்திருக்கிறார்கள். நடிகர் வடிவேலு விஜயகாந்த் மீது குற்றம் சாட்டி அவருடன் தகராறுக்கு என்றால் அதுவும் அவருடைய சரிவிற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் நீங்கள் எல்லோரும் ஒரு வருடகாலமாக தான் ஊரடங்கில் இருந்து வருகிறீர்கள். ஆனால் நான் 10 வருடகாலமாக ஊரடங்கில் தான் இருக்கிறேன் என்று மன வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

தற்போதும் என்னுடைய உடலில் பலமும் , திரைப்படத்தில் நடக்க வேண்டும் என்ற ஆசையும், இருந்து வருகிறது. ஆனாலும் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று தெரிவித்தார் .வீட்டிலேயே இருப்பது எவ்வளவு கொடுமையானது தெரியுமா என்று கேட்டிருக்கிறார். இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கின்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.