தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

0
84
Vaccine Mixi, Washing Machine Gift! Notice issued by the Collector!
Vaccine Mixi, Washing Machine Gift! Notice issued by the Collector!

தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் அனைத்தயும் பாதித்தது வருகிறது.மக்களும் தொடர்ந்து விடாமல் போராடி வருகின்றனர்,இருப்பினும் தொற்று பாதிப்பு குறைவது போலவே நாளடைவில் அதிகரித்தும் வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீராக நடத்த முடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பல முறைகளில் அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது.இருப்பினும் மக்களுக்கு அது ஏதும் போதுமானதாக இல்லை.

அந்தவகையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை தற்போது தான் முடிந்துள்ளது.மக்கள் அதன் பாதிப்பை அறிந்து அனைவரும் தடுப்பூசி போட முன்வந்துள்ளனர்.இருப்பினும் ஓர் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர்.அவர்களுக்கென்று தான் தமிழக அரசு ,மெகா தடுப்பூசி முகாம் என்ற ஒன்றை வாரம் தோறும் செயல்படுத்தி வருகிறது.முதல் முறை மெகா தடுப்பூசி நடந்தபோதே 20 லட்சத்திற்கு மேல் மக்கள் செலுத்திக்க்கொண்டனர்.அதனையடுத்து தற்போது வரை வாரம் தோறும் தடுப்பூசி முகாம் நடத்தி வருகின்றனர்.

அவ்வாறு நடத்தியும் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களை வீடு தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி செலுத்தி வருகின்றனர்.அந்தவகையில் கரூரில் புதிய வகை முறையை அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்  தற்போது செயல்படுத்த உள்ளார்.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குழுக்கள் முறையில் மிக்ஸி,வாஷிங்மெஷின் போன்றவற்றை தர உள்ளதாக கூறியுள்ளார்.இந்த பரிசானது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 100 பேர்களின் பெயரை எழுதி,அவர்க்களில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல யார் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார் என்பதை  கண்டறிய வேண்டுமென்று அலுவலர்களிடம் அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி அவ்வாறு கண்டறிந்து தடுப்பூசி செலுத்த அழைத்து வருபவர்களின் அலுவலர் பெயரும் இந்த குழுக்களில் சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.மேலும் 25 பேருக்கு மேலாக கொரோனா தடுப்பூசி போட அழைத்து வரும் அலுவரகளுக்கு தலா ரூ.5 என ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.