தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

0
77
covaxin covishield
covaxin covishield

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் முடுக்கிவிட்டுள்ளன. ஆஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின், நோவாவாக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதில், சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி, ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது. தடுப்பூசிக்காக மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் மத்திய அரசையே நம்பியுள்ள  நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோரும் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.

இந்த பிரச்சனையை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50% தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மீதமுள்ள 50% தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், சந்தைகளுக்கும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில், தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு இதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கலாம் என தெரிவித்துள்ள மத்திய அரசு, தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் கோவின் ஆப் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.