சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய செய்தி! சென்னை மக்களே தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!

0
79

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அந்த நோய் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.ஆனால் தற்சமயம் திமுக அரசு செயல்படுவதை விட சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் நோய்த்தொற்று பணிகளை முன்னெடுப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பான பங்கினை கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த சமயத்தில் மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தது.

ஆனால் தற்சமயம் திமுக அரசு தமிழகத்தில் அமைந்திருப்பதால் மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு பெரிய அளவில் கருணை காட்டுவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.காரணம் எப்போதும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு அதை வைத்து திமுக அரசியல் செய்து கொண்டே இருப்பதால் மத்திய அரசு பெரிய அளவில் தமிழகத்தை கவனத்தில் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது.இந்த சூழ்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 12ஆம் தேதி 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறியிருக்கின்றார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி பணி மிக சிறப்பாக நடந்து வருகிறது தமிழக அரசின் தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக, தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்ததோடு சென்னையில் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று தடுப்பூசிகள் போடப்படுகிறது. குடிசை பகுதிகள் மற்றும் கோயம்பேடு காய்கறி சந்தை போன்ற பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என கூறி இருக்கின்றார்.

சென்னை பெருநகர மாநகராட்சி இதுவரையில் நாற்பத்தி மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 753 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் 29 லட்சத்து 89 ஆயிரத்து 64 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் பதிமூன்று லட்சத்து 73 ஆயிரத்து 689 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லப்பட்டு இருக்கிறது.இப்படியான நிலையில், செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னையில் தீவிர தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு முடிவு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். ஒரு வாரத்திற்கு ஒரு நிலையான தடுப்புசி முகமும், இரண்டு நடமாடும் தடுப்பூசி முகங்களும் ஏற்படுத்தப்படும் இதில் 600 மருத்துவர்கள் மற்றும் 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

தீவிர தடுப்பூசி முகாம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதற்காக மலேரியா தடுப்பு பணியாளர்கள் 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள் 1400 அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள் என்று கூறியிருக்கின்றார். அதோடு பல அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வை உண்டாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட எல்லோரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டு நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.