உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

0
109
#image_title

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனுவை ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரிக்கவுள்ள நிலையில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில். உத்தர பிரதேசத்தில் 2017 -ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள சுமார் 183 என்கவுன்டர்களையும், உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது விவகாரத்தையும் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வழக்குரைஞர் விஷால் திவாரி மீண்டும் நேற்று முன் தினம் முறையிட்டார்.

முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனு ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்து உத்தர பிரதேசத்தின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author avatar
Savitha