ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்த உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

0
69

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து, “அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடத்தப்பட வேண்டும். இது மகிழ்ச்சிக்கான, ஆர்ப்பரிப்புக்கான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெருமைமிகு பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி மூலம் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ராமர் கோயில் கட்டுவது என்பது பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நிறைவேறுகிறது என்றும் இது மற்ற கோவில்களைப் போல் சாதாரணக் கோவில் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தப் பூமி பூஜைக்குச் செல்ல லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை நாம் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
Parthipan K