இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

0
67

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

தக்காளி இரு விதமாக நமது தோல்களுக்கு பயன்படுகிறது. ஒன்று பொலிவைத் தருகிறது. மட்டுமின்றி மென்மையான சருமத்தையும் கொடுக்கிறது.

தக்காளியை நம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தை பொலிவாக்குகிறது மற்றும் முகப்பருக்களை குறைக்கிறது மற்றும் வெயிலில் சென்று தோல் கருமையடையும் போது அதை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டுவர தக்காளி பயன்படுகிறது.

தக்காளியில் விட்டமின் C இருப்பதால் அது நம் முகத்திற்கு மிகுந்த பளபளப்பைத் தருகிறது. இப்பொழுது நாம் பார்க்கவிருக்கும் முறையானது மிகவும் எளிமையானது. இந்த எளிமையான முறையை வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே செய்யலாம்.

தக்காளியை வைத்து எப்படி முகத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கலாம்? வாருங்கள் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. தக்காளி

2. பால்

செய்முறை:

1. 2 தக்காளியை எடுத்துக் கொள்ளவும்.அதனை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. வெட்டிய தக்காளி துண்டை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது அதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பாலை ஊற்றி கலக்கி கொள்ளவும்.

4. நன்றாக கலந்த கலவையை முகம் மற்றும் கழுத்துகளில் தேய்த்து விடவும்.

5. காயும் வரை வைத்திருக்கலாம் அல்லது இரவு முழுவதும் வைத்திருக்கலாம்.

6. முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி விடவும்.

7. இதை தவறாமல் ஒரு நாளுக்கு ஒரு முறை பயன்படுத்துங்கள்.

இந்த முறையை வீட்டிலேயே செய்யலாம். உங்கள் முகத்தை குறைந்த நேரத்திலேயே கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும். தக்காளியை ஒருமுறை பயன்படுத்திவிட்டால் இதனைப் மறுபடியும் பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது.

 

 

 

author avatar
Kowsalya