கடைசி நேரத்தில் போரில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கா! அதிர்ச்சியில் சீனர்கள்!

0
133
USA
USA

உலக நாடுகளுக்கு இடையே போர்கள் என்றால், எல்லைப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்காகத் தான் பெரும்பாலும் இருக்கும். அப்படித்தான் இதுவரை நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உலகப்போர், உள்நாட்டுப் போர், பனிப்போர் என பல வழிகளில் அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதாகத்தான் போர்கள் இருந்து வருகின்றன.

ஆனால், நூற்றாண்டுக்கும் மேலாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்  ஒலிம்பிக் போட்டியை போர் என்றே அழைக்க வேண்டும் அந்த அளவுக்கு நாடுகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது. ஆனால், இந்த போரில் உயிர்கள் பறிக்கப்படுவதில்லை. மாறாக, இளைஞர்களை ஊக்குவித்து, மக்களை மகிழ்ச்சி அடைய செய்வதாகவே உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கத்தையும், அதிக பதக்கங்களையும் யார் கைப்பற்றுவார்கள் என்பதைக் ஆவலுடன் காத்திருப்பது வாடிக்கை. நேற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், இந்த போர் ஆவலை கூட்டி கடைசி நேரத்தில் மாற்றியமைத்தது.

கடைசி நாள் வரை பதக்கப்பட்டியலில் 38 தங்கப் பதக்கத்தை கைப்பற்றி முதலிடத்தை சீனா தக்க வைத்து வந்தது. இரண்டாம் இடத்தில் 36 தங்கத்துடன் இருந்த அமெரிக்கா முதலிடத்தை பிடிக்க போட்டா போட்டி போட்டது. கடைசி நாள் என்பதால் முதலிடம் பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்,  கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் 3 தங்கம் உட்பட 5 பதக்கத்தை அமெரிக்க வீரர்கள் கைப்பற்றினர். இதன் மூலம், பதக்கப்பட்டியலில் 39 தங்கப் பதக்கத்துடன், சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு சென்றது அமெரிக்கா.

மொத்த பதக்கப் பட்டியலிலும் அமெரிக்காவே முதலிடம் பிடித்தது. மொத்தமாக 113 பதங்களைப் பெற்றுள்ளது. பட்டியலை கீழே காணலாம்.

தங்கம் மட்டுமன்றி வெள்ளி, வெண்கலத்திலும் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அமெரிக்கா பிடித்திருப்பது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்திலாவது முன்னிலையில் இருந்தோமே! இப்போது அதுவும் போச்சே என்று என்னும் அளவுக்கு சீனர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதில் மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், முதல் 5 இடத்தை உலக வல்லரசு நாடுகளே பிடித்துள்ளன. இதே போன்று, அடுத்த 5 இடத்திற்குள்ளும் வல்லரசு நாடுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்தியா 48வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் போரில் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் மேலும் அதிகமாக பெற்று புதிய புதிய சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறோம்.