உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்?

0
81

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி! பின்வாங்குமா ரஷிய படைகள்?

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இன்று இருபதாவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும் போரை தொடர்ந்து கொண்டே வருகிறது ரஷியா. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலின் காரணமாக உக்ரைன் நாட்டினர் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைபற்றியுள்ளது ரஷிய ராணுவம்.

ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள் தற்போது மருத்துவமனைகள், விமான நிலையங்கள், குடியிருப்பு கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷியாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு பல உலக நாடுகள் மற்றும் ஐ.நா.அமைப்பு ஆகியவை தங்கள் கண்டனத்தை தெரிவித்தன.

இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் எந்தவிதமான சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து, இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினர் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம். மேலும், உக்ரேனிய உயிர்களை காப்பாற்ற அவர்களுக்கு நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K