நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்! தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோரிக்கை வைத்த பாஜக அதிமுக!

0
62

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது.

திமுகவின் சார்பாக கிரிராஜன், அதிமுக சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தாமோதரன், பாஜக சார்பாக கரு. நாகராஜன், தியாகராஜன், என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய திமுகவின் கிரிராஜன், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், நோய்த்தொற்று விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், திமுக சார்பாக வலியுறுத்தப்பட்டது என கூறினார்.

அதிமுகவின் சார்பாக பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், துணை ராணுவப் படையைச் சார்ந்தவர்களை முழுமையாக பயன்படுத்தி அவர்களுடைய கண்காணிப்பில் இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் இருக்கின்றன. இது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் வழங்கி இருக்கின்றோம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

பாஜகவின் சார்பாக உரையாற்றிய நாகராஜன் அனைத்துக் கட்சிகளும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். தேர்தலுக்கு துணை ராணுவப் படையை வரவழைத்து நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், தேர்தல் தேதியை முறையாக அவகாசத்துடன் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி என தெரிவித்திருக்கிறார்.