நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்த பா.ம.க!

0
95

சற்றேறக்குறைய 3 வருட காலமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்காக பலர் நீதிமன்றக் கதவைத் தட்டிய பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்தது.

அதன்படி கடந்த 26 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அதோடு 28ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி சென்ற 6ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அடிப்படையில் இன்று காலை 8 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 3வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ரங்கநாதன் வெற்றி பெற்றிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் 4வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல குற்றாலம் பேரூராட்சியில் 4வது வார்டில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். சேலம் மாநகராட்சியில் பாமக 4 வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது.மொத்தமுள்ள 3,843 வார்டுகளில் 532 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி 9 பகுதிகளில்க வெற்றி பெற்றிருக்கிறது.