Connect with us

Uncategorized

20 சதவீதமாக யுரேனியம் செறிவூட்டப்படும் அளவு உயரும்… ஈரான்!

Published

on

2015ஆம் ஆண்டு அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா,பிரான்ஸ்,சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்துகொண்டது.இந்த ஒப்பந்தத்தின்படி அணுசக்தி எரிபொருளாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் 3.67% சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,அதற்கு மேல் செறிவூட்டக்கூடாது எனவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

ஆனால் இந்த நிபந்தனையை அமெரிக்க நலன்களுக்கு எதிரானது எனக்கூறிய டிரம்ப், கடந்த 2018ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலகிக்கொண்டார்.ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை மேற்கொண்டது.

Advertisement

தற்பொழுது ஈரான் நாட்டின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹி கூறுவது: யுரேனியம் செறிவூட்டல் 20 சதவீதமாக அதிகரிக்க மேலிடத்திலிருந்து எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி தற்பொழுது 4% யுரேனியத்தை செறிவூட்டும் கருவிகள் 20% செறிவூட்டும் கருவிகளாக மாற்ற ஃபோர்டா அணுசக்தி மையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் சர்வதேச அணுசக்தி அமைப்பின்(ஐஏஇஏ) கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார்.

இதைப் பற்றி அந்த மையத்தினை கண்காணித்து வரும் ஐஏஇஏ அமைப்பு கூறுவதாவது: நாடாளுமன்றத்தில் ஈரான் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் அடிப்படையில் 20 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அளவை அதிகரிக்குமாறு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது சர்வதேச அணுசக்தி அமைப்பின் வழியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரயேல் உள்ளிட்ட நாடுகள் ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியதால் ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அதன்பிறகு ஈரான் தங்களது அணுசக்தி மையங்களில் அணு ஆயுதங்கள் செய்யப்படுவதில்லை என உறுதியளித்து அதற்கு பதிலாக தனது நாட்டின் மீது உள்ள பொருளாதாரத் தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டது.அதன்படி தடையும் நீக்கப்பட்டது.

Advertisement

ஆனால் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது மீண்டும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமல் படுத்தினார்.இதனால் கோபம் கொண்ட ஈரான் வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள பல நிபந்தனைகளை மீறத் தொடங்கியது.இதன் முதல் கட்டமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவை 3.46 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக உயர்த்தியது தற்போது இதன் அளவை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

தற்போது யுரேனியம் செறிவூட்டப்பட உபயோகிக்கப்படும் கருவிகள் 4 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட உளவுப்படை தலைவர் காசிம் சுலைமான் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான சனிக்கிழமை அன்று தொடங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது.

Advertisement