காவல்துறையினரின் தடையை மீறி விநாயகர் சிலையை கடலில் கரைத்த இந்து முன்னணியினர்! காவல்துறையினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
80

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் நாட்டில் அதிகரித்து வருவதால் பல பண்டிகைகள் கொண்டாடுவதற்கு அரசு சார்பாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பொங்கல், தீபாவளி, உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் கொண்டாடுவதற்கான தடை இந்தியா முழுவதும் நீடித்து வருகிறது.இந்த நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநில அரசு அந்த விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்தது. கொண்டாட்டத்தின் முடிவில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக உஷாராகி கொண்ட தமிழக அரசு நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

அதாவது பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது, ஒரு குழுவாக சென்று விநாயகர் சிலையை கடலில் கரைப்பது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்தது. ஆனால் பக்தர்கள் அவரவர் வீட்டுக்குள்ளேயே விநாயகரை வழிபடலாம் என்று அறிவித்து இருந்தது.இதன் காரணமாக, நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தமிழகம் முழுவதும் கண்காணித்து வந்தார்கள்.

கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என்ற தடையை மீறி சென்னை மெரினா கடற்கரையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை கரைத்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது. அதேபோல பல பகுதிகளில் வைத்து வழிபட்ட சிலைகளை பல இந்து அமைப்பினர் கடலில் கரைத்தார்கள் இதன்காரணமாக, மெரினா கடற்கரையில் பரபரப்பு உண்டானது.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக விநாயகர் சிலைகளை கொண்டு வருவதற்கும், கடலில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது, இதற்கு முன்னரே பாஜக இந்து முன்னணியினர் போன்ற அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் பல போராட்டங்கள் நடந்தது ஆனால் அதனை கண்டுகொள்ளாத தமிழக அரசு தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தது.

ஆனால் தமிழக அரசின் தடையை மீறி நேற்றைய தினம் பல தொகுதிகளில் இந்து முன்னணி சார்பாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட பட்டது. அதோடு விநாயகர் சிலைகளை கடலிலும் கரைத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் இந்து முன்னணியினருக்கு இடையே தள்ளுமுள்ளு உண்டானது.

அதன்படி பல இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையினரை மீறி சென்னை மெரினா கடற்கரையில் இந்து முன்னணியினர் கரைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் 3 அடியில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை பூஜைகள் செய்து கடலில் கரைப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து திருவல்லிக்கேணி காமராஜர் சாலை வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு வந்து அதன் பின்னர் கடற்கரையில் வைத்து பூஜை செய்து அதனை கடலில் கரைத்தார்கள். இந்த செயலை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்தும் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்பட்டது. அதேபோல பல பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபட்ட பல அமைப்பைச் சார்ந்தவர்கள் கடலில் சிலையை கரைப்பதற்கு எடுத்து வந்தார்கள்.

அதிலும் குறிப்பாக மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், போன்ற பகுதிகளில் வீட்டில் வைத்து வழிபட்ட பொதுமக்கள் சிலைகளை தங்கள் குடும்பத்தினரோடு வந்து சிலைகளை கடற்கரையில் கரைத்து சென்றார்கள். பொதுமக்கள் கூட்டம் இதனால் பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அலைமோதியது. வீட்டில் வைத்து வழிபட்ட சிலைகளை கோவிலில் கொண்டு வந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் பொதுமக்களே நேரடியாக வந்து கடற்கரையில் சிலைகளை கரைத்து இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.