அன்லாக் 1.0வின் ரயில் சேவை – சலுகைகள் குறைப்பால் மக்கள் அதிருப்தி

0
66

இன்றுமுதல் தொடங்கப்படவுள்ள ரயில் சேவையின் மூலம் 200 சிறப்பு ரயில்களில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளனர். துரந்தோ, சதாப்தி, கரிப் ராத் ரயில்களின் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிட்டபடி அனைத்து ரயில்களும் இயக்கப்படும். வரும் 30ஆம் தேதி வரை பல்வேறு ரயில்களில் பயணிக்க 26 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் ராஜ்தானி ரயில்களுடன் கூடுதல் இயக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்டமாக அதிகப்படியான ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக இயக்கப்படும் ரயில்களில் பார்சல், லக்கேஜ் ஆகியவற்றிற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 30 ரயில்கள் டெல்லியில் இருந்து நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும். முன்பதிவு செய்யாத டிக்கெட்கள் தற்போதைக்கு கிடையாது.

அதே சமயம் பயணத்திற்கு முன்பாக டிக்கெட் அளிக்கப்படும் சேவையும் இல்லை. மேலும் RAC டிக்கெட் பயணிகள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர். ஆனால் வெயிட்டிங் லிஸ்டில்(Waiting List) இருக்கும் டிக்கெட்களுக்கு அனுமதி இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பயணிகளும் ரயிலில் ஏறுவதற்கு முன்பு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வர வேண்டும் எனவும், இன்றுமுதல் தொடங்கப்படவுள்ள ரயில் சேவையின் மூலம் 200 சிறப்பு ரயில்களில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளனர்.

துரந்தோ, சதாப்தி, கரிப் ராத் ரயில்களின் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிட்டபடி அனைத்து ரயில்களும் இயக்கப்படும். வரும் 30ஆம் தேதி வரை பல்வேறு ரயில்களில் பயணிக்க 26 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் ராஜ்தானி ரயில்களுடன் கூடுதல் இயக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்டமாக அதிகப்படியான ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக இயக்கப்படும் ரயில்களில் பார்சல், லக்கேஜ் ஆகியவற்றிற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் 30 ரயில்கள் டெல்லியில் இருந்து நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும். முன்பதிவு செய்யாத டிக்கெட்கள் தற்போதைக்கு கிடையாது.அதேசமயம் பயணத்திற்கு முன்பாக டிக்கெட் அளிக்கப்படும் சேவையும் இல்லை.

மேலும் RAC டிக்கெட் பயணிகள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர். ஆனால் வெயிட்டிங் லிஸ்டில்(Waiting List) இருக்கும் டிக்கெட்களுக்கு அனுமதி இல்லை.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பயணிகளும் ரயிலில் ஏறுவதற்கு முன்பு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வர வேண்டும் எனவும் தங்கள் பயணம் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசின் உத்தரவின்படி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமையல் அறைகள் இணைக்கப்பட்ட ரயில்களில் மட்டும் குறிப்பிட்ட உணவுப் பொருட்கள், குடிநீர் மட்டும் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.ரயிலில் திரை சீலை, போர்வை, தலையணை போன்றவை தரப்படாது. வேண்டுமென்றால் பயணிகளே கொண்டு வரலாம் என்றும் இரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு சலுகைகள் குறைக்கப்பட்டதாலும், இறுதி நேரத்தில் ரயிலை பிடிக்கும் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பயணத்திற்கு முன் நேரம் நீட்டிக்கப்பட்டதாலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K