இறுதியாண்டு தேர்வுகளை பார்த்து எழுத பல்கலைகழகம் அனுமதி !!

0
71

கொரோனா காலத்தில் மாணவர்களின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், இறுதி பருவத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் எழுதும் மாணவர்கள் புத்தகங்களை வைத்து விடைத்தாள் எழுதலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ,இறுதி பருவத்தேர்வு எழுத ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என மாணவர்களின் விருப்பம் போல தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறையில் புத்தகம் வைத்தும் மற்றும் பிற ஆய்வு பொருட்களை பார்த்தும் தேர்வு எழுத அனுமதித்துள்ளது.

மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கவும், கேள்விக்கான சரியான பதிலை மாணவர்கள் புரிந்து கொண்டு பதிலளிக்க இது வழிவகை செய்யும் என்று கூறியுள்ளார். கொரோனாவால் மாணவர்கள் புத்தகங்கள், குறியீடுகளை பராமரிக்காமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்கள் என பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

மேலும், தேர்வு காலம் மற்றும் தேர்வுக்கான நிபந்தனைகள் ஆகியவற்றை முன்பு அறிவித்தது போலவே நடைபெறும் என்றும், மாணவர்கள் தேர்வினை A4 வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு எழுத வேண்டும் என்றும் ,தேர்வு எழுத அனைத்து பக்கங்களையும் மாணவர்கள் முடித்து 30 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்து கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ,மாணவர்கள் தேர்வு எழுதும் முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், தேர்வு ஆகியவற்றுடன் மாணவர்களின் கையெழுத்துடன் இரண்டாம் பக்கத்தில் இருந்து விடைகளை எழுத வேண்டும் என்ற பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K