அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

0
87

அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் இருக்கின்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்படும் ஆனால் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அந்த அளவுக்கான எண்ணிக்கை குறைந்தால் வழங்கப்பட்ட பொது சின்னமானது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருக்கிறது.

அதன்படி தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தோடு இருக்கும் கட்சிகளைத் தவிர்த்து விட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்கு பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது அதோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கின்ற மற்ற கட்சிகள் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சிகள் தனி சின்னத்தை பயன்படுத்த இயலும் என்ற நிலையில் இருந்து வருகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழ் மாநில காங்கிரஸ் பழைய சின்னமாக இருந்த சைக்கிள் சின்னத்தை கேட்டது 5 சதவீத இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி அந்த கட்சி இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

அந்தக் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட காரணத்தால், அந்த கட்சி கோரிய தனி சின்னமான சைக்கிள் சின்னம் அந்த கட்சிக்கு வழங்கப்படவில்லை. சுயச்சை சின்னமான ஆட்டோ சின்னமே வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்சமயம் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகள் என்றால் 12 இடங்களில் போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனிச் சின்னம் கொடுக்கப்படும் எதிர்வரும் காலத்தில் அந்த சின்னத்தையும் தக்க வைத்துக்கொள்ள இயலும் ஆகவேதான் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கின்ற மதிமுக, விசிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூடுதல் இடங்களை எதிர்பார்த்து நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இப்போது இருக்கும் சூழ்நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 10 இடங்களும் விசிக்காவிற்கு 6 இடங்களும் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளும் கொடுக்கப்படலாம் என்று ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இப்போது தெரிவிக்கப்பட்டிருக்கும் அதே அளவில் அந்த கட்சிகள் போட்டியிடும் ஆனால் அந்த கட்சிகளின் தனிச் சின்னத்தில் போட்டியிட இயலாத நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கின்ற சிறிய கட்சிகளுக்கு சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.