இப்போது இது தொடர்பாக பேச வேண்டிய அவசியமில்லை! மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை!

0
53

நோய் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் கடுமை காட்டப்பட்டது.இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது, இருந்தாலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அதிகமாக பின்பற்றப்படாத காரணத்தால், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், நாட்டில் பண்டிகை காலம் வர இருப்பதால் பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வாரந்தோறும் வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்து நாட்டின் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதே போல நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மக்கள் நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், போன்ற வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரும் தடுப்பூசியின் இரண்டு தவணையையும் போட்டுக்கொள்வது அவசியம் என தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. ஆனாலும் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் பெருவாரியான எண்ணிக்கைகேரளாவில் தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

எ நாட்டில் 18 மாவட்டங்களில் வாராந்திர தொற்று பாதிப்பு 5% முதல் 10% வரை பதிவாகியிருக்கிறது, கேரளாவில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் நோய் சிகிச்சையில் இருக்கிறார்கள், நாட்டின் ஒட்டுமொத்த நோய் தொற்றில் சிகிச்சையில் இருப்பவர்களின் 52% ஆகும் மகாராஷ்டிராவின் நாற்பதாயிரம் நபர்களும், தமிழகத்தில் 17000 நபர்களும், மிசோரத்தில் 16800 நபர்களும், கர்நாடகத்தில் 12000 நபர்களும், சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்க்கவா நோய்தொற்று காலத்தின் தேவை இல்லாத பயணத்தை தவிர்ப்பது மற்றும் இந்த வருடமாவது பண்டிகைகளுக்கு ஆடம்பரம் இல்லாமல் கொண்டாடுவது புத்திசாலித்தனம் நோய்த்தொற்றுக்கு வேறுபாடு தெரியாது கூட்டமாக இருந்தால் தொற்றி கொள்ளும் என கூறியிருக்கிறார்.

சுற்றுலா தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடுவது சுற்றுலா சென்றபோது மக்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி விடும், இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அதோடு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதே தற்போதைய நோக்கம் பூஸ்டர் தடுப்பு ஊசிகள் தொடர்பான பேச்சு தற்சமயம் அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்.