இனிமேல் இந்த ஆன்லைன் ஆப்களுக்கு தடை! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

0
78

இனிமேல் இந்த ஆன்லைன் ஆப்களுக்கு தடை! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

சமீப காலமாக ஆன்லைனில் கடன் பெறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சில ஆன்லைன் கடன் தரும் ஆப்கள் மக்களின் டேட்டாக்களை திருடி அதன் மூலம் கடன் வாங்கியவர்களை மிரட்டி வருகிறது.

இவ்வாறு மிரட்டுவதால் அவர்கள் செய்வதறியாது தற்கொலை செய்து விடுகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ஆப் ஆன கிரெடிட் பிஎன்ற ஆப் , கடன் பெற்றவர்களை பிளாக் மெயில் செய்த வந்துள்ளது. அவர்களின் செல்போனில் உள்ள புகைப்படங்களை எடுத்து, மார்ஃபிங் செய்து அவர்கலையே மிரட்டி வந்துள்ளது. இதனால் பல புகார்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.

இதனை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் அனைத்து கடன் தரும் செயலிகளையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

குறித்த அங்கீகாரம் உடன் செயல்படும் செயலிகளை மட்டுமே பிளே ஸ்டோரில் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே அங்கீகாரம் இன்றி இவ்வாறு போலியாக செயல்பட்டு வரும் அனைத்து கடன் தரும் செயலிகளும் இனி இயங்காது.