மத்திய பட்ஜெட் திறனாளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

0
86

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராக கொண்டிருக்கின்ற வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய நிவாரணத்தை அறிவித்திருக்கிறார். செக்சன் 80 டிடி எனப்படும் பிரிவு மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு காப்பீட்டு கொள்கைக்காக செலுத்தப்படும் எந்த தொகைக்கும் விலக்கு கோர அனுமதி வழங்குகிறது..

அதுபோன்ற நபர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த வரிச்சலுகையை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரிச்சலுகையை நிபந்தனைகளுடன்கூடியது தற்சமயம் அவை தளர்த்தப்பட்டிருக்கின்றன. வருமான வரி சட்டம் 1961 கீழ் வெளிவந்திருக்கின்றது என்ற முக்கிய நிதி நிலை அறிவிப்பு மற்றும் இதன் நன்மைகள் தொடர்பாக மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் மேலும் புரிந்துகொள்ள இதனைத் தொடர்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த காப்பீட்டு கொள்கையானது மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக வைத்திருக்கும் நபர்களுக்கு மொத்த தொகையாகவும், அல்லது வருடாந்திர வழக்கமான வருமானமாக வந்துசேரும்.

ஆனால் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்தபிறகு அவர்களை சார்ந்திருப்பவர்கள் தொகையை பெற்றால் மட்டுமே வரிச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மாற்றுத்திறனாளிகள் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டால் அது பிரிமியம் பெய்டாக கருதப்படாமல் பாலிசிதாரரின் வருமானமாக கருதப்பட்டு வருமானம் தரப்படும். ஆண்டில் வரி விதிக்கப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை 2022 இந்த விதியை தளர்த்தியுள்ளது.

ஆனால் தற்சமயம் பெற்றோரின் வாழ்நாளின் போதே இந்த நன்மை அனைவருக்கும் கிடைக்கும். ஆனாலும் அவர்களுக்கு 60 வயது ஆன பின்னர் தான் வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

செக்ஷன் 80 டிடி என்பது வரி செலுத்துவோர் அதாவது பெற்றோர் அல்லது மற்ற பாதுகாவலர்கள் மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக கொண்டிருந்தால் அவர்களுடைய மருத்துவ சிகிச்சை, பயிற்சி மற்றும் மறுவாழ்வு உள்ளிட்டவற்றை கவனித்துக் கொள்வதற்காக நிவாரணம் வழங்கும் ஒரு செக்‌ஷனாகும். பாதுகாவலர்களின் மனைவி ,குழந்தைகள் பெற்றோர், சகோதர, சகோதரிகளும், அடங்குவர் என்று சொல்லப்படுகிறது.

செக்ஷன் 80 டிடி எனப்படுவது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கானது. அதேநேரம் செக்ஷன் 80 யூ மாற்றுத்திறனாளிகளுக்கு பொருந்தும். இதன் விதிகள் ஒத்தவை உங்களுடைய குறைபாட்டுக்கான மருத்துவ சிகிச்சைக்கு நீங்கள் செலவு செய்தால் 75000 முதல் 1.25 லட்சம் வரையில் விளக்கு கோரலாம். அதாவது செக்சன் 80 டிடியை போலவே மாற்றுத்திறன் 40 சதவீதத்திற்கு மேல் இருந்தால் விலக்கு வரம்பு 75000மாக இருக்கும்.

கடுமையான குறைபாடுகள் இருப்பவர்கள் அதாவது மாற்றுத்திறன் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 1.25 லட்சம் ரூபாய் வரையில் பிடித்தம் பெற தகுதியானவர்கள்.

இதில் எப்போதும் உண்மையான செலவுகள் கணக்கிடப்பட்டு இது ஒரு ஃப்ளாட் ஆன விலக்கு என்று சொல்லப்படுகிறது. மற்றும் செலவழித்த உண்மையான தொகையை சார்ந்ததில்லை. மாற்றுத்திறன் கொண்ட நபரின் பராமரிப்பது, முழுமையாகவோ அல்லது பிரதானமாகவும் வரி செலுத்துபவரை சார்ந்திருக்க வேண்டும் மற்றும் பிரிவு 80யு வின் கீழ் இயலாமைக்கான விலக்குகளை தனித்தனியே கோரக் கூடாது என்கிறார்கள் வரி ஆலோசனை நிறுவனங்கள்.

ஆகவே மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக வைத்திருக்கும் தனிநபர் அல்லது பாதுகாவலர் செய்யும் உண்மையான செலவுகள் குறிப்பிடப்பட்ட வரம்பை மீறி விட்டாலும், அவர்கள் 75000 அல்லது 1.25 லட்சத்தை விலக்காக கோரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.