ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள்! சிறப்பு கூட்டத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

0
64

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த முடிவுக்கு வந்திருக்கிறது. தாலிபான் தீவிரவாதிகள் அந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்று விட்டது. இந்த செய்தி வெளியான உடனேயே உலகநாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்களுடைய நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை ஆரம்பித்துவிட்டன.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் அந்த நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்ற அபாயம் உண்டாகி இருக்கிறது. அதோடு அந்த நாட்டில் பல மனித உரிமை மீறல்களும் தாலிபான் தீவிரவாதிகளால் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த சிறப்பு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது.