வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!

0
99
Unemployed youth can apply! Government action to pay monthly wages!
Unemployed youth can apply! Government action to pay monthly wages!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகாம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி அதற்கு மேலாக கல்வித் தகுதியுடையவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டு நிறைவடைய வேண்டும்.

மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும்  இளைஞர்களுக்கு தமிழக அரசு தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. பயன்பெறும் இளைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு   மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டபட்டிருந்தது.

மேலும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மனுதாரர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் இதனைத் தவிர்த்து மற்ற சமூகத்தினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து பத்தாம் வகுப்பு தோல்வி பெற்றவர்களுக்கு  மாதம் 200 ரூபாய் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் மற்றும் மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு  400  ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாய் வீதம் காலாண்டுக்கு ஒரு முறை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனது தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் 600 ரூபாயும், உயர்கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் 750 ரூபாயும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ஆயிரம் ரூபாய்  வீதம் அவரவர்களின்  வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் வேலை வாய்ப்பு அட்டையை   ஆதாரமாக கொண்டு  மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் இது தவிர www. Tnvelaivaippu.gov.in என்ற  அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

author avatar
Parthipan K