ஐநா சபையின் பொதுச் செயலாளர் வருகையின்போது அதிர்ச்சி வழங்கிய ரஷ்யப் படைகள்!

0
65

ரஷ்யா சென்ற வருடமே உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு தன் நாட்டு ஏவுகணைகளையும், ராணுவ நிலைகளையும், உக்ரைன் எல்லையில் நிறுத்த தொடங்கியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இருந்தாலும் எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து தன்னுடைய வேலைகளை செய்து வந்தது ரஷ்யா.

இப்படியான நிலையில், சென்ற பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் தொடுத்தனர். இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தற்போது வரையில் எந்தவிதமான இடைவெளியுமின்றி போர் நடைபெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகிறார்கள்.

சொந்த நாட்டிலேயே காலம் கடத்த விருப்பம் கொள்பவர்கள் ரஷ்யாவின் ஆயுதங்களுக்கு தங்களுடைய உயிரை பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. இருந்தாலும் தாக்குதலுக்கு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு அந்த நாடு போராடி வருகிறது போரை கைவிட வேண்டும் என்று ரஷ்யாவை ஐநாசபை வலியுறுத்தி வருகிறது.

2 மாத காலமாக தொடர்ந்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகள் உள்ளிட்ட வலியுறுத்தியும், அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துவிட்டு ஐநா சபையின் பொதுச் செயலாளர் உக்ரைன் நாட்டிற்கு புறப்பட்டார்.

உக்ரைன் நாட்டில் ஏராளமானோரை கொன்று புதைத்திருக்கின்ற புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்த அவர், ரஷ்யாவும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தப் போர் எந்த சமயத்தில் முடிவுக்கு வரும் என்பது தொடர்பாக அவர் தெரிவிக்கும் போது சந்திப்புகள் காரணமாக, போர் முடிவுக்கு வந்து விடாது.

போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் ரஷ்யா எடுக்கின்ற முடிவில் தான் இருக்கிறது. ரஷ்யா முடிவு செய்யும் வரையில் போர் முடிந்து விடாது என்று தெரிவித்தார்.

உக்ரைன் போரில் இதுவரை 2,829 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும், 3,180 பேர் படுகாயமடைந்திருக்கின்றன என்றும் ஐநா சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் தலைநகரின் மையப்பகுதியில் ஐநாவின் தலைவர் வருகையை முன்னிட்டு ரஷ்யாவின் ஏவுகணைகள் வான்வெளி தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பலத்த சத்தம் எழுந்தது, நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலால் அவரும், அவருடைய குழுவினரும், அதிர்ச்சிக்குள்ளாகினர்.

25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் 2 தளங்கள் சேதமடைந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.

கரும்புகை வானம் வரை சென்றது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக, 10 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஐநாவின் மனித நேய அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கும்போது, அது ஒரு போர் மண்டலம் ஆனால் எங்களுக்கு மிக அருகில் தாக்குதல் நடந்தது அதிர்ச்சியளித்தது என தெரிவித்தார்.

நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவே இருக்கின்றோம் எனவும், அவர் கூறியிருக்கிறார் தாக்குதல் நடைபெற்ற பகுதியிலிருந்து மூணு கிலோ மீட்டர் தொலைவில் ஐநா சபையின் பொதுச் செயலாளர் ,உக்ரைன் அதிபர் உள்ளிட்ட இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவிருந்தார்கள்.

அதற்கு ஒரு மணிநேரத்திற்கு குறைவாக இந்த தாக்குதல் நடந்திருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெலன்ஸ்கி நாங்கள் தலைநகரில் பேசி முடித்தவுடன் ரஷ்யாவின் 5 ஏவுகணைகள் நகரில் வந்து விழுந்தனர் என்று தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. அமைப்பின் தலைமையை அவமதிக்கிறது என்பதற்கு இந்த தாக்குதலே ஒரு சாட்சியாக விளங்குகிறது என அவர் கூறியிருக்கிறார்.

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கும்போது பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்பு மீது மற்றும் உலகப் பாதுகாப்பு மேலும் நடந்த தாக்குதல் ஆகத்தான் இதைப் பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.