News4 Tamil
News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today

2050 – ஐநா முதல் கிராமங்கள் வரை! கூலாக எச்சரித்த ராமதாஸ் !!

0

2050 – ஐநா முதல் கிராமங்கள் வரை! கூலாக எச்சரித்த ராமதாஸ் !!

மூத்த அரசியல்வாதியும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆன மருத்துவர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிவிப்பில் கூறியதாவது,

“ஆட்சியாளர்களின் கவனத்துக்கு மக்களின் மனநிலையைத் தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறவிருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் “இன்றைய நிலையில் உலகுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் ஆகும் எனவும் சூழ்நிலையில் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார் .

ஒவ்வொரு நிலையும் பின்வருமாறு விளக்கமாக எடுத்து கூறி மக்களை கவரும் வண்ணம் கூலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • ” காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்; அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது ஆனாலும் ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ,
 • புவிவெப்பநிலை இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில், இதுவே உலகம் முழுவதும் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை 10 லட்சத்தில் 415 பங்கு என்பதிலிருந்து 350 பங்காகக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகள் அழிவை நோக்கி செல்வதைத் தடுக்க முடியாது. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பற்றிஒவ்விவரிக்கிறா வெளியாகி வரும் புதிய தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. காலநிலை மாற்றத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும் அபாயம் உள்ளது,
 • காலநிலை மாற்றத்தின் விளைவாகக் கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடலோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக்கூடும் என்பன உள்ளிட்ட ஆபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன.
 • 2050-ம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி ஒருபுறம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும். மிக மோசமான காலநிலைகள் காரணமாக மனிதர்களுக்குப் பல்வேறு வகையான நோய்களும் காயங்களும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் மோதல்கள், வன்முறைகள், உள்நாட்டுக் கலகம், போர் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது . ,
 • தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்னடைவை சந்திக்கக் கூடும் காலநிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றுக்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன.
 • கேரளத்திலும் கர்நாடகத்திலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள அவலாஞ்சியிலும் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts
1 of 161
 • மற்றொருபுறம் தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் வெப்பநிலையும் வறட்சியும் அதிகரித்து இருக்கின்றன.
 • இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.
 • காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுப்பதற்கான கடமையும் பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் மட்டும்தான் இருப்பதாக நினைக்கக் கூடாது; அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது. பூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமான ஒன்றாகும்.
 • மின்னியல் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருள்களை குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மாமிசம் உண்பதைக் குறைத்தல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்.
 • இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவுபடுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் ஐ.நா நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
 • இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களின் மாநகர அவைகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலைமாற்ற அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மத்திய அரசு நிலையிலிருந்து உள்ளாட்சிகள் வரை இதே பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும்,இக்கோரிக்கையைத் தமிழ்நாட்டில் நாங்கள்தான் வலியுறுத்தி வருகிறோம். பொதுமக்கள் தரப்பிலிருந்தும் இத்தகைய வலியுறுத்தல்கள் வந்தால்தான் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படும்.

இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என மக்களிடம் இந்நாளில் பல புள்ளி விவரங்களை மக்களுக்கு புரியும்படி வாழ்வாதாரம் வளம் பெற நீங்கள் தான் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கிராமசபை ஓர் ஆயுதம் என்பதை மறாவமல் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறைகளை பதிவு செய்து தீர்வு காண ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு.ஆகவே அனைவரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Copy

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

error: Content is protected !!
WhatsApp chat