ஏழு நாட்களில் அல்சர் குணமாக! ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி!

0
261
#image_title

ஏழு நாட்களில் அல்சர் குணமாக! ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அல்சர் பிரச்சனையினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொண்டைக்கும் இரைப்பயிக்கும் இடையில் உள்ள உணவு குழாயில் ஏற்படும் புண்களை தான் நாம் அல்சர் என்று கூறுகின்றோம். மேலும் முன் சிறு குடல் கூடலில் மட்டும் புண்கள் ஏற்பட்டால் டியோடினர் அல்சர் எனவும் இரைப்பைக்குள் புண்கள் ஏற்பட்டால் கேஸ்டிக் அல்சர் என்று கூறுவார்கள். பொதுவாக இந்த கேஸ்டிக் அல்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் மிகவும் அதிகம். இந்த கேஸ்டிக் அல்சர் உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடன் புலியேப்பமாக வரத் தொடங்கும். பிறகு நெஞ்சில் இடது பகுதிக்கு கீழ் எரிச்சல் போல் தோன்றும், வலிக்க தொடங்கும்.பிறகு சாப்பிட்ட உடன் வாந்தி வரத் தொடங்கும்.

மேலும் மூன்று வேலையும் சரியாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சனையானது வரத் தொடங்கும். இதற்கு காரணம் என்னவென்றால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பக்க விளைவின் காரணமாக கூட இருக்கலாம். வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த அல்சரை எவ்வாறு குணமாக்குவது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தயிர் போட்டுக் கொள்ள வேண்டும். முக்கியமாக புளிச்ச தயிரை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இது அல்சரை மேலும் உண்டாக்கக் கூடியதாக மாறிவிடும். பிறகு அந்த டம்ளர் முழுவதும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

அப்படி செய்தால் மோர் தயாராகிவிடும். பிறகு இதனுடன் 1/4ஸ்பூன் சீரகப்பொடி, இந்து உப்பு 1/4 ஸ்பூன் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இது நன்றாக பசியை தூண்டி அல்சரை குறைக்கக்கூடிய தன்மை உண்டு. மேலும் இதற்கு அஜீரணம், வாய்வு பிரச்சனை, கண் பார்வை தெளிவடைய செய்வது போன்ற ஆற்றலும் மிகவும் அதிகம். இதனை காலை சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின்பு மாலை சாப்பிட்ட பிறகு அரைமணி நேரத்திற்கு பின்பும் குடிக்க வேண்டும். இது ஒருவருக்கு அல்சர் தொடக்க நிலையில் இருக்கும் பொழுது இவ்வாறு செய்ய வேண்டும். ஆனால் அல்சர் குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொழுது இதனை ஒரு நாளைக்கு நான்கு வேலைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

author avatar
Parthipan K