ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

0
114

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷியா. இன்று 30-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள், தற்போது உக்ரைன் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

ரஷிய படைகளின் இந்த தீவிர தாக்குதலை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் மிக மோசமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தீவிர தாக்குதலின் காரணமாக அச்சமடைந்த உக்ரைனிய மக்கள் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் ஒன்றில் கூட சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் இராணுவத்தின் ஆயுத படைகள் கூறுகையில், மே 9-ந் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷிய துருப்புகளிடம் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K