உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் அதிபர் நெஞ்சார்ந்த நன்றி!

0
143

உக்ரைனில் சற்றேறக்குறைய 3 மாத காலமாக இடைவிடாது தன்னுடைய தாக்குதலை நிகழ்த்தி வருகிறது ரஷ்யா.இதனால் உக்ரைன் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது மேலும் பல கட்டமைப்புக்களை ரஷ்ய ராணுவம் தரைமட்டமாக்கியிருக்கிறது.

அதோடு உக்ரைனின் ராணுவ நிலைகள் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டனர்.ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா உக்ரைனுக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரிலுள்ள அசோவ் உருக்காலையிலிருந்த படைவீரர்கள் 1000 பேர் சரணடைந்திருக்கிறார்கள் என ரஷ்ய ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நகரம் முழுவதும் ரஷ்யப் படைகள் வசம் வந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தநிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடுமையான சேதங்களை சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதி உதவியாக 40 பில்லியன் டாலர்களை அமெரிக்க நாடாளுமன்றம் நிதி உதவியாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

சென்ற சில தினங்களுக்கு முன்னர் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் வழங்கிய நிலையில் மறுபடியும் நிதி உதவி செய்வதற்கு அமெரிக்கா முன் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கி வரும் அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்திருக்கிறார்.