ரஷ்யாவின் இலக்கு இதுதான்! உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

0
72

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அந்த நாடுகளில் இருக்கும் பல்வேறு நாடுகளின் பொதுமக்களை அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம். ஆகவே உக்ரைனிலிருக்கின்ற அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில், நேற்று திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், ரஷ்ய ராணுவ படைகள் உறையின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது இதில் உக்ரைன் நிலைகுலைந்து போனது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருக்கின்ற ஒரு வீடியோவில் தெரிவித்திருப்பதாவது ஐரோப்பிய நாடுகளில் 2வது உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது ரஷ்யா தன்னை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், தன்னுடைய குடும்பம் தான் அவர்களுடைய 2வது இலக்கு என்றும் உக்ரைனின் தலைமையை அழித்து அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் ஊடுருவி இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக, நகரத்தின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் அரசு பணிபுரிய தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியிருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.