புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி?

0
83

புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி?

இன்று காலையில் புறப்பட்ட சில மணி நேரங்களில் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 180 பயணிகளின் நிலையானது தற்போது என்ன என்பது கேள்விகுறி ஆகியுள்ளது.

ஈரான் தலைநகரான டெஹ்ரான் அருகில் இந்த விபத்தானது நடந்துள்ளது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்தானது நடந்துள்ளது.

போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது என்பது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த விமான விபத்தின் மூலமாக மீண்டும் அந்த விமானங்களின் மீது சந்தேகம் வலுக்கிறது. பொதுவாக போயிங் ரக விமானங்களில் நிறைய தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணையில் இந்த விமானமும் தொழில்நுட்ப கோளாறினால் தான் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகளின் நிலை என்ன ஆனது என்று எந்த விவரமும் அறியப்படவில்லை.

இதனையடுத்து விமான விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். மேலும் அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு தொடர்ந்து அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விமான விபத்தில் எத்தனை பயணிகள் காயம் அடைந்தார்கள். அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.