ரஷ்யப் படைகளின் அட்டூழியம்! உக்ரைனில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!

0
66

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற போர் தொடர்ந்து நீடித்து வருகிறது, அதோடு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்றன.

அதோடு உக்ரைனிய தலைநகர் கீவ் நகரையும் ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கீவ் நகரிலுள்ள நீர் மின் நிலையத்தை ரஷ்யப் படைகள் தன்வசப்படுத்திவிட்டது என்று நேற்றைய தினமே அறிவித்திருந்தது.

அதோடு தொடர்ந்து கீவ் நகர் முழுவதும் ரஷ்யப் படைகள் தன்னுடைய ஆக்ரோஷ தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் தாக்கம் காரணமாக, நேற்று காலை வரையில் அதாவது 4 நாளில் 210 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1,100 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் ரஷ்யப் படைகள் இவ்வாறு மனிதாபிமானமற்ற செயல்களில் உக்ரைன் நாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் மறுபுறமும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று தெரிவித்து வருகிறார்.

மேலே தெரிவிக்கப்பட்ட தகவலை உக்ரைன் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில் இதுவரையில் பார்த்திராத கொடுமையாக குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள், உள்ளிட்டவை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். மருத்துவமனை குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை பாய்ந்ததை ரஷ்ய ராணுவம் தவறுதலாக ஏவுகணை பாய்ந்து விட்டது என்று தங்கள் பக்க நியாயத்தை தெரிவித்திருக்கிறது.