நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

0
127

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய புத்தகங்களை அனிதாவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு பரிசாக வழங்கினார். இந்த விலைமதிப்பில்லா புத்தகங்கள் பல புதிய அனிதாக்களை உருவாக்கி, மறைந்த அனிதாவின் ஆத்மாவை சாந்தியடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது:
தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்

பாஜக-அதிமுக அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் முக ஸ்டாலின்
அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியின் இந்த டுவீட்டுக்கும், விலைமதிப்பில்லா புத்தகங்கள் கொடுத்தனுப்பிய முக ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது

author avatar
CineDesk