‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய்

0
98

‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய்

பாலிவுட் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பேன் இந்தியா ரிலீஸாக ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஆண்டு வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இது சம்மந்தமாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுவது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் “இந்த படம் சார்பாக எங்களை அணுக உள்ளதாக தகவல் வந்தபோதே, தொடர்ந்து படங்களை வெளியிடுகிறோம். அதனால் பாலிவுட் படத்தையாவது விட்டு வைப்போம் என நினைத்தேன். ஆனால் அமீர்கான் சாரே நேரடியாக போன் செய்து கேட்டபோது என்னால் மறுக்கவில்லை. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன்.” எனக் கூறியுள்ளார்.