ஸ்டாலின் எட்டடி பாய்ந்தால்! பதினாறு அடி பாயும் உதயநிதி நமக்கு நாமே2 ஸ்டார்ட்!

0
59

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்து ஓட்டுகளை ஒன்றிணைக்கும் வகையிலே யாத்திரையை பாஜக நடத்தி வருகின்றது. திமுகவை குறிவைத்து பாஜக செயல்பட்டாலும் அந்த யாத்திரையை திமுக கண்டுகொள்ளவில்லை. அதைப்பற்றி கருத்து தெரிவித்து அதற்கு விளம்பரம் தேடி விட வேண்டாம் என்று அந்த கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவு விட்டு இருக்கின்றது. அதேநேரத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர்வதற்கான அவசியம் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்காகவே உதயநிதி ஸ்டாலினை வைத்து 100 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்வது என்று திமுகவின் தலைமை முடிவு செய்து இருக்கின்றது.

உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆரம்பிக்கப்படும் இந்த பிரசாரம் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் இன்றைய தினம் ஆரம்பிக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு மிக மோசமான தோல்வியை சந்தித்தது திமுக ஆனால் 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஒரு எழுச்சி கண்டது திமுக. அந்த தேர்தலில் அதிமுகவிடம் வெறும் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தது. அந்த எழுச்சிக்கு காரணம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர், மற்றும் அக்டோபர், மாதங்களில் நடத்திய நமக்கு நாமே பிரச்சாரம் தான் என்று தெரிவிக்கிறார்கள்.

அதே போல ஒரு பிரச்சாரத்தை தான் இப்போது உதயநிதி ஸ்டாலினும் மேற்கொள்ளவிருக்கிறார். நோய்த் தொற்றின் காரணமாக ஸ்டாலின் எந்த ஒரு வெளியூர் பயணமும் மேற்கொள்ளவில்லை. காணொளி மூலமாகவே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். அந்த ஒரு குறையை தீர்ப்பதற்காகவே திமுக தலைமை உதயநிதி ஸ்டாலினை வைத்து இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றது.