அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

0
149
#image_title

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே கடுமையான நீதிமன்ற போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி எடப்பாடி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கட்சி மற்றும் அதிகார மைய பிரச்சினை குறித்து அடிக்கடி இருவரும் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வந்தனர்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது அவரை சந்திக்க எடப்பாடி மற்றும் பன்னீர் ஆகியோர் போட்டி போட்டு கொண்டு முன் அனுமதி வாங்குவதில் குறியாக இருந்தனர். இவர்களின் இந்த செயல் குறித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் தங்களுடைய கட்சி பிரச்சினை குறித்து மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதாகவும், மக்கள் நலன் குறித்து பேசுவதில்லை எனவும், மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கட்சி நிலைமை எப்படி இருந்தது தற்போது அவர் இல்லாத நிலையில் எப்படி உள்ளது என கேள்வி எழுப்பினார்.

தமிழக ஆளுநர் ரவி தமிழ்நாட்டை தமிழகம் என மாற்றிவிடு மாறு கூறினார். எடப்பாடி பழனிசாமி தற்போது முதலைமச்சராக இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பெயரை நிச்சயம் மாற்றியிருப்பார். ஜெயலலிதா எப்போதும் பேசுகையில் எனக்கு எதிரிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என கூறி வருவார். ஆனால் அவருக்கு எதிரிகள் அவருக்கு பின்னால் இருந்துள்ளனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியை கடந்த மாதம் தான் சந்தித்து பேசியதை சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் அவரிடம் நான் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில் தமிழகத்தில் விளையாட்டு துறை மேம்பாடு சம்பந்தமாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது பற்றி மட்டுமே பேசியதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்திருப்பது தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிமுகவை சீண்டி வரும் அமைச்சர் உதயநிதிக்கு அதிமுக சார்பில் விரைவில் தக்க பதிலடி தரப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.