காவல்துறையின் அலட்சியத்தால் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம்!

0
65

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தண்ணீர் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்த வலியையும், வேதனையையும் தாங்கிக் கொள்ள இயலாமல் அவருடைய தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் துயரத்தின் உச்சமாக இருக்கிறது.

சதீஷ் என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் அவருடைய காதலை சத்தியா ஏற்க மறுத்ததால் இந்த கொடூர கொலையை அவர் செய்திருக்கிறார் பெண்களை போக பொருளாக கருதும் ஆணாதிக்க மற்றும் நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இந்த படுகொலை சம்பவம் காட்சி தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

சதீஷ் மீது முன்கூட்டியே சில புகார்கள் கொடுக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் எழுதி வாங்கிக்கொண்டு புகாரை முடித்து வைக்கும் வேலை தான் காதலை நடந்திருக்கிறது பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல் என்பது தனி குற்றமாக ஆக்கப்பட்ட பிறகும், காவல்துறை இதுபோன்ற புகார்களை புறந்தள்ளுவது முற்றிலும் நியாயம் இல்லாதது.

ஆண் பெண் உறவு தொடர்பான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த வேண்டியது சமூகத்தின் பொறுப்பு பள்ளிகளில் இதற்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும். அதோடு திரைப்படங்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் போக்கு இருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காதல் என்பது இயல்பானது வரவேற்கத்தக்கது ஆனால் அது இருதரப்பு ஒப்புதலை பெற்றதாக இருக்க வேண்டும். பெண்களை ஆண்களின் உடைமைகளாக கருதும் மனநிலை தான் இது போன்ற கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. பாலியல் குறித்த புகார்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதோடு, சரியான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன இதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இது போன்ற கொடூர கொலைகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு விரைவாக சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையின் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.