ஹோட்டலில் திடிரென்று கேட்ட துப்பாக்கிச் சத்தம்! 2 பேர் பரிதாப பலி!

0
63

எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதோடு இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற டொனெட்ஸ் ஹரானிட்னே நகரில் ஓட்டல் ஒன்று இருக்கிறது. இந்த ஓட்டலில் நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது வாடிக்கையாளர்களில் இருதரப்பினரிடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. இந்த வாக்குவாதம் முற்றிய சூழ்நிலையில், ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டார்கள். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஹோட்டலில் தங்கியிருந்த எல்லோரும் அங்குமிங்குமாக ஓடத் தொடங்கினார்கள். ஆனாலும் அந்த நபர்கள் தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.