Breaking News
பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி

பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய தீவிர சோதனையில் பயணி இருவரிடம் 10கிலோ கஞ்சா பறிமுதல். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பயணிகள் இருவரது உடைமைகளை சோதனை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 10கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன், கோகுல்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.