ஐபிஎல் ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்

0
81

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குரிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வீர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 19 ஆம் தேதி  தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளது. இந்நிலையில் ஏழு வெவ்வேறு மொழிகளில் ரசிகர்களுக்காக குழு எமோஜிகளை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. ஐபிஎல் ரசிகர்கள் ஐபிஎல் குழு உரையாடல்களின் ஒரு பகுதியாக இந்த புதிய குழு எமோஜிகளைப் பயன்படுத்தலாம். இந்த சிறப்பு குழு ஈமோஜிகளை ஆங்கிலம் மற்றும் ஆறு இந்திய மொழிகளில் ஹேஷ்டேக்குகள் மூலம் செயல்படுத்தலாம். அணி ஈமோஜிகளைத் திறக்கும் சில ஹேஷ்டேக்குகள் இங்கே: #OneFamily, #WhistlePodu, #PlayBold, #KorboLorboJeetbo, #SaddaPunjab, #OrangeArmy, #HallaBol, மற்றும் #YehHaiNayiDilli. 

author avatar
Parthipan K